Posts

எனது மொழிபெயர்ப்புகள்-1

Image
எனது மொழிபெயர்ப்புகள்-1 இடதுசாரிகளிடமிருந்து எங்கள் வெளியேறலே தலித் இலக்கியத்தின் ஆரம்பம்   Rasi.Panneerselvan (Panneerselvan athiba)     05:53   மொழிபெயர்ப்புகள், வெமுல எல்லய்யா நேர்காணல்                                                                        - டாக்டர் கே.புருஷோத்தம் - ஜே.பீமய்யா                                                                         தமிழில்- பன்னீர்செல்வன் அதிபா வெமுல  எல்லய்யா    தற்காலத் தெலுங்கு எழுத்தாளர்களுள் மிகுந்த நம்பிக்கை வெளிச்சத்தோடு வெளிப்பட்டிருப்பவர்களில் ஒருவரான எல்லய்யா (1973 ) மாதிகா என்ற தலித் பிரிவைச் சார்ந்தவர். தெலுங்கில் முதுகலைப் பட்டம் பெற்று தற்போது அதில் பி.ஹெச்.டி ஆய்வை மேற்கொண்டிருப்பவர். இதுவரை கக்கா (2000), சித்தி ( 2004) ஆகிய இரண்டு தலித் நாவல்களை வெளியிட்டிருக்கிறார். இவரது நிறைய தலித்திய கவிதைகள் தினசரிகளிலும் தொகுப்புகளிலும் வெளியாகியுள்ளன. மேடைக்கலையில் தனக்கிருக்கும் அனுபவத்தின் வாயிலாக    தன் நாவல்களில் தலித்திய தெருநாடக பாணியிலான விவரிப்புகளை கையாளுகிறார். *** தலித் இலக்

செம்மலர் வாசிப்பு மேசை

இது செம்மலர் இதழின் வாசிப்புப்  பதிவுகளுக்கான தனிப் பக்கம்   இதில் செம்மலர் இதழை வாசித்து விமர்சனங்களை பதிவு செய்யுமாறு நண்பர்களை கேட்டுகொண்டேன் .   இது தொடர்பான முதல் கலந்துரையாடல் கூட்டம்  19.01.2014 அன்று  புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவலத்தில்  எனது ஒருங்கிணைப்பில் நடைபெற்றது . தோழர்கள் அ மணவாளன் ,  புதுகை மதியழகன் , லெ .பிரபாகரன் ,T.சிவராமகிருஷ்ணன், சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டு செம்மலர்  இதழ் குறித்து கலந்துரையாடினர் .   தொடர் நிகழ்வாக  தோழர் T.சிவராம கிருஷ்ணன்  மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியிருந்த  செம்மலர்-பிப்ரவரி-2014 குறித்த அவரது விமர்சனத்தை இங்கு பதிவிடுவதில் மகிழ்கிறேன் . தோழர் TSK அவர்களுக்கு நன்றிகள் .   செம்மலர்-பிப்ரவரி-2014    அட்டைகளின் உட்ப்பக்கக் கவிதைகளும் மதுக்கூர் ராமலிங்கத்தின் கடைசிப் பக்க அலசலும் கௌரவக் கொலைகளைக் கண்ணியமாய்க் கண்டிக்கின்றன. ஆண்சாதி பெண்சாதி என்னும் பாவேந்தர் அவர்களின் கூற்றும்,  ” ஆதலினாற் காதல் செய்வீர் ” என்னும் மகாகவியின் வரியும்  ” விந்தைகள் புரிவது ”  என்று மக்கள் கவிஞர் முழங்குவதும், “கசக்கிப்

வெப்பம் சொட்டும் பூக்கள்

கவிஞர் சுவாதியின் - உலகே பூச்செண்டு- கவிதை நூலில்    நான் எழுதியுள்ள முன்னுரையின் தொடக்கப்பகுதி அ திகாலைக் காட்டின் ர்ர்ர்ங்ங்ங்....... நிலம் தெளிந்த ர்ர்ர்ங்ங்ங்...... கருக்கலில் ர்ர்ர்ங்ங்ங்...........  காயாம் பூக்களின் ர்ர்ர்ங்ங்ங்..கிறங்கடிக்கும் நறுமணத்தின் ர்ர்ர்ங்ங்ங் ஊடாக காதுகளில் சில்லிப்பாய் பாயும் வண்டுகளின் ரீங்காரம் . . . . பரந்து கிடக்கும் கண்மாயில் சலுக்... சலுக்... கணுக்காலளவு சலுக்சலுக்... வெள்ளி நீரில் தூக்கி அடி வைத்து சலுக்.... சலுக்....  நடக்கும் சிலிர்ப்பு..... திருவிழாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே புதுத்தெப்பம் கட்டுவதற்காக குளத்தில் ஊறப்போட்ட நீண்டமரங்களில் ஏறி உட்கார்ந்து கொண்டு கைகளால் துடுப்புபோட்டு அக்கரை சென்று மீளும் பிள்ளைப்பிராயம்....... பெருங்காற்றுக்கு எதிராய் முகங்கொடுத்து முடிக்கற்றை பின்னோக்கி விரைய எல்லைப் பொட்டலில் எடுப்புக் குதிரைகளை பார்க்க வேகநடைபோட்டுச் சென்ற திருநாள் நாட்கள்...... அருகாமை நகரத்தில் சினிமா பார்த்துவிட்டு பேருந்து இல்லாமல், நடுநிசியில், குறுக்குப் பாதைகளின் வரப்புகளில் சைக்கிள் டயரைக் கொளுத்திக் கொண்ட
Image
பாலாவின் விரல்களின் குரல்கள் கவிஞர் தங்கம்மூர்த்தி தொகுத்துள்ள கவிதைவெளியினிலே நூலில்    நான் எழுதியுள்ள முன்னுரை த மிழ்க்கவிதை, தனது உணர்ச்சியின் திவலைகள் சொட்டி நனைந்த காவியப் படிமானங்களிலிருந்தும், மண்ணில் கால்பதிக்காத அதீத கற்பனாவாதத்திலிருந்தும், மக்களை மறுதலித்த நிலஉடைமைக் கால கருத்தோட்டங்களிலிருந்தும், மொழியின் பூட்டப்பட்ட சட்டகங்களிலிருந்தும் வெளியேறவேண்டிய நிர்பந்தத்தை முதலில் எதிர்கொண்டவன் பாரதி.  அவன்தான் புதிய யுகத்திற்கான கவிதை மொழியோடு தமிழின் நவகவிதையை ஆரம்பித்து வைத்தான். தொடர்ந்து இந்தியத் தத்துவச் சாயலோடும், தமிழ் மரபின் ஓசையோடும் ‘எழுத்து” மற்றும் பிற கவிதை இயக்கங்கள் எழுச்சி பெற்றன.  பழைய வடிவம் மற்றும் உள்ளடக்கத் தளைகளிலிருந்து கவிதையை விடுவிக்க அவர்கள் தம் “புதுக்குரல்”;களால் முயற்சித்தனர். அவர்களுக்கு முற்றிலும் எதிர் நிலையில் நின்று புத்தாக்கம் செய்யப்பட்ட படிம, உருவக அழகுகள் கொண்ட வடிவத்தோடும், மனித குலத்தின் மாபெரும் துயரங்களுக்கு மாற்றுகாண விழைந்த உள்ளடக்கத்தோடும் வானம்பாடிகள் தங்கள் இயங்குதலை ஆரம்பித்தனர்.  இடதுசாரி கருத்தமைவுகளோடு கூடிய