Posts

Showing posts from 2014

செம்மலர் வாசிப்பு மேசை

இது செம்மலர் இதழின் வாசிப்புப்  பதிவுகளுக்கான தனிப் பக்கம்   இதில் செம்மலர் இதழை வாசித்து விமர்சனங்களை பதிவு செய்யுமாறு நண்பர்களை கேட்டுகொண்டேன் .   இது தொடர்பான முதல் கலந்துரையாடல் கூட்டம்  19.01.2014 அன்று  புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவலத்தில்  எனது ஒருங்கிணைப்பில் நடைபெற்றது . தோழர்கள் அ மணவாளன் ,  புதுகை மதியழகன் , லெ .பிரபாகரன் ,T.சிவராமகிருஷ்ணன், சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டு செம்மலர்  இதழ் குறித்து கலந்துரையாடினர் .   தொடர் நிகழ்வாக  தோழர் T.சிவராம கிருஷ்ணன்  மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியிருந்த  செம்மலர்-பிப்ரவரி-2014 குறித்த அவரது விமர்சனத்தை இங்கு பதிவிடுவதில் மகிழ்கிறேன் . தோழர் TSK அவர்களுக்கு நன்றிகள் .   செம்மலர்-பிப்ரவரி-2014    அட்டைகளின் உட்ப்பக்கக் கவிதைகளும் மதுக்கூர் ராமலிங்கத்தின் கடைசிப் பக்க அலசலும் கௌரவக் கொலைகளைக் கண்ணியமாய்க் கண்டிக்கின்றன. ஆண்சாதி பெண்சாதி என்னும் பாவேந்தர் அவர்களின் கூற்றும்,  ” ஆதலினாற் காதல் செய்வீர் ” ...