செம்மலர் வாசிப்பு மேசை

இது செம்மலர் இதழின் வாசிப்புப்  பதிவுகளுக்கான தனிப் பக்கம்

  இதில் செம்மலர் இதழை வாசித்து விமர்சனங்களை பதிவு செய்யுமாறு நண்பர்களை கேட்டுகொண்டேன் .
  இது தொடர்பான முதல் கலந்துரையாடல் கூட்டம்  19.01.2014 அன்று 
புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவலத்தில் 
எனது ஒருங்கிணைப்பில் நடைபெற்றது . தோழர்கள் அ மணவாளன் , 
புதுகை மதியழகன் ,லெ .பிரபாகரன் ,T.சிவராமகிருஷ்ணன், சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டு செம்மலர் இதழ் குறித்து கலந்துரையாடினர் .

  தொடர் நிகழ்வாக தோழர் T.சிவராமகிருஷ்ணன் மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியிருந்த செம்மலர்-பிப்ரவரி-2014 குறித்த அவரது விமர்சனத்தை இங்கு பதிவிடுவதில் மகிழ்கிறேன் . தோழர் TSK அவர்களுக்கு நன்றிகள் . 



செம்மலர்-பிப்ரவரி-2014



  அட்டைகளின் உட்ப்பக்கக் கவிதைகளும் மதுக்கூர் ராமலிங்கத்தின் கடைசிப் பக்க அலசலும் கௌரவக் கொலைகளைக் கண்ணியமாய்க் கண்டிக்கின்றன. ஆண்சாதி பெண்சாதி என்னும் பாவேந்தர் அவர்களின் கூற்றும், ஆதலினாற் காதல் செய்வீர்என்னும் மகாகவியின் வரியும் விந்தைகள் புரிவது” என்று மக்கள் கவிஞர் முழங்குவதும், “கசக்கிப்பிழியப்படும்காதலின் இன்றைய நிலை பற்றி ஷெல்லி அவர்களின் வேதனை வரிகளும் நன்கு நினைவூட்டப்பட்டுள்ளன.

பொங்கல் திரைப்படங்கள்
   
  உலகத்திரைப்படங்கள் பற்றிய ஜனவரி-14 இத்ழில் வெளியான விமர்சனங்களோடு இந்த இத்ழில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்பட விமர்சன்ங்களை ஒப்பிடும்போது வாசகர் நெஞ்சில் வேதனையும் ஏக்கமும் ஏற்படுவது இயற்கை.

தோழனும் காதலனுமாய்
   
  தனித்தன்மை வாய்ந்த திறமையான இருவர் காதல் வயப்படும்போது எழக்கூடிய விளைவுகளை ரோசாலக்சம்பர்க் லியோஜோகிச்சுக்கு எழுதிய கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன.எதையும் விட்டுக்கொடுக்க விரும்பாதவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்..காதலா வரலாறா- பிரித்துப்பார்க்க முடியாத படைப்பு.

தலையங்கம்
   
   பெண்கள் தலைவர்களானால், பெண்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்ற கருத்துத் தவறானது என்பதை நிரூபிக்க மேலும் ஒரு சான்றாக “தங்க வங்கத்துக்கு வந்த பங்கத்தைத் தலையங்கம் தெளிவாக்குகிறது.


வீரத் தெலுங்கானா
   
  ஆதிக்க சக்திகளின் அடக்கு முறைகளுக்கு சுதந்திரம் அடைந்த நாடும் அடிமை நாடுகளும் ஒன்றுதான் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.

திறனா அரசியலா
   
  மேனாட்டுக்கல்வி முறையிலிருந்து சுதந்திர இந்தியாவுக்குப் பொருத்தமான கல்வி முறைக்கு மாறுவது அவ்வளவு எளிதானது அல்ல.அதில் புகுந்துள்ள அரசியல்,வசதி படைத்தவர்களின் ஆதிக்கம் கெட்டித்துப்போயுள்ள அலுவலக அமைப்பு, இந்த வேகத்தடைகளைக் கடந்து, சிந்தனையளர்களின் தாக்கத்தைக் உருவாக்கி.....மூச்சு முட்டுகிறது,உயர் கல்வி பெற்றவர்கள்கூட பிரச்சினைகளைச் சந்திக்க இயலாதவர்களாகி விடுகிறார்கள்;குடும்பங்கள் சிதறி விடுகின்றன;வளர்ந்து வரும் கௌரவக் கொலைகள் பெண்ணுரிமைகளைக் கேலி செய்கின்றன;சமூகப் பிரக்ஞையற்ற
ஜடமாக வாழ்கிறார்கள்;வாக்களிக்க மறுக்கிறார்கள்;குடியரசு மற்றும் சுதந்திரதினக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் உருவாவதற்குக் கல்வி முறையில் உள்ள பலவீனம் முதன்மையான காரணம் என்பதை இந்த்த் தலைமுறைக்கு யார் உணர்த்த்ப்போகிறார்கள்? தவறுகளைத் தட்டிக்கேட்காத சமூகத்தை உருவாக்க மும்முரமாகச் செயல்படும் வர்க்க அரசியலைச் சரியான முறையில், சுட்டிக்காட்ட ஆசிரியர்களுக்குத் தற்போது உள்ள வறையரைகள்/ இயலாமை நன்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.அரசியலை உள்ளுறையாக வைத்துதிறமைதான் முக்கியம் என்பதை வெளியில் சொல்லி வஞ்சகமாகச் செயல்படும் சக்திகளை அம்பலப் படுத்துவது எப்படி? விரிவாக விவாதிக்கவேண்டும்.

பேபி ஹால்டர்
   
  திறமை,ஆர்வம்,முனைப்பு இருந்தால் எந்த சூழ்நிலையிலும் எழுத முடியும் என்பதை பேபி ஹால்டர் நிரூபிக்கிறார்.அதற்கு பிரமோத்குமார் போன்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஒளிக்கீற்று
      
  தனிமைப்பட்ட முதுமையின் மனவோட்டங்களை அழ்காகச் சித்தரிக்கிறது-ஈழ்த்தமிழில். றாம் எடுத்தாலும் வராத நித்திரை; சைக்கிளில் வலம் வந்த காலம் போய் சாய்மனையிலிருந்து கைத்தடியோடு மட்டும் பேசிக்கொண்டு.....சருகின் சத்தம் கூட “ஆரோ வருகினம்” என்று எண்ணத்தூண்டுகிறது; நடுத்தரக் குடும்பங்களில் காதல் எவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறது என்ற சித்தரிப்பு; மனித உயிர்கள் மலிவாகி,ஆயுதங்கள் மலிவாகி உருவாக்கிய பங்கர் வாழ்க்கை”, சிதறிப்போன குடும்ப உறவுகள்.... இத்தனையும் தாண்டி குடும்பத்தை வரவேற்க,வீட்டைத் துப்புறவாக்க “வீச்சாக நடக்கும் முதுமைக்கு வயது குறைந்துதான்விட்ட்து.
   
  ஒரு சிறு கதைக்குள் இத்தனை அம்சங்களா!

 சிறை
  
   ஈ ஓட்டம் பார்ப்பதில் வல்லவன்;தேன்கூடு இருக்குமிட்த்தைத் துல்லியமாகச் சொல்லமுடியும்; பாறைக்குப் பாறை தாவி தேனடை எடுக்க  முடியும்-ஒரு ராட்டு கூட சேதமடையாமல்;  தட்த்தை வைத்து மிருகங்களை இனம் காண முடியும்; என்னதான் சொல்லிக்கொடுத்தாலும் அதை மீறி இயல்பாக உண்மையை உளறும் சுபாவம்-இப்படிப்பட்டவர்கள் இந்த சமுதாயத்தில் வாழத் தகுந்த இடமாகச் சிறையைத் தேர்வு செய்வது வெட்கித் தலை குனியவேண்டிய சமூக அவலம். வனக்காவலர்களின் வன்முறைகள்,காவல்துறையினரின் அத்து மீறல்கள்,செல்வந்தர்களுக்காக அர்ப்பணிக்கப்படும் குடியிருப்புப் பகுதி.....அவர்களால் எப்படி இவற்றை சமாளிக்க முடியும்? வனமாதா கொடுத்த்தை பாரத மாதாவின்  புதல்வர்கள் பறிப்பதா-உறுத்துகிறது.
   
  புலையன்,புலைக்குடி போன்ற வார்த்தைகள் 25 முறை இடம் பெறுகின்றன?   


Comments

Popular posts from this blog

எனது மதிப்புரைகள்

எனது மொழிபெயர்ப்புகள்-1

வெப்பம் சொட்டும் பூக்கள்